Tuesday, August 30, 2011

ஜெயலலிதா

ஜெயலலிதாவின் அணுகுமுறையில் மிகச் சிறந்த முன்னேற்றம் .
அவர் பெரும்பாலும் அடக்குமுறை நடவடிக்கைகளாலேயே அறியப்பட்டு வந்துள்ளார் .
இந்த முறை அவர் ஆட்சியேறிய முதல் ,மக்கள் விருப்பம் சார்ந்தே அவரது
நடவடிக்கைகள் இருந்து வருகிறது சமச்சீர் கல்வி தவிர .
இலங்கை பொருளாதாரத் தடை மற்றும் சமீபத்திய தூக்குத்தண்டனை எதிர்ப்பு தீர்மானங்கள் அவற்றில் சில .
இவரின் தற்போதைய அணுகுமுறை பெருவாரியான மக்களால் ஆதரவும் பாராட்டும் பெற்று வருவது
குறிப்பிடத் தக்கது .திமுகவினர் மீதான நடவடிக்கைகள் ஒருவகையில் சரியென்றே படுகிறது.
இப்போதே அதிக நம்பிக்கை வைப்பது அதிகமென்றாலும்,இது தொடர வேண்டும் என்ற ஆசை மேலிடுவது
உண்மையே.இவ்வாறே தொடருமெனில்,தமிழ் நாட்டின் முன்னேற்றப் பாதை தீர்க்கமானதாகவே தெரிகிறது.
என்னைப் பொறுத்த வரையில் அவர் எப்போதும் விருப்பமான தலைவராக இருந்ததில்லை.ஆச்சர்யமூட்டும்
வகையில் அவரது அணுகுமுறையின் மாற்றம்,அவரை பாராட்டும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்தவை கசப்பானதாகவே இருந்த போதிலும் ,நடப்பவை மிக நல்லதாக இருக்கும் பட்சத்தில்,பாராட்டுவதில்
தவறேனும் இல்லை.
திமுக எதிர்ப்பு நடவடிக்கைகளை தவிர்த்து,தமிழ்நாட்டின் முன்னேற்ற விசயங்களில் அதிக கவனம் செலுத்தினால்
மிகச் சிறந்த தலைவராக அறியப் படுவார்.
தற்போதைய ஆட்சிக் காலம்,அவரது எதிர்கால அரசியலுக்கு மிகச் சிறந்த ஆணிவேராக அமையக்கூடும்.
-மதுசூதனன்.

Monday, February 25, 2008